Breaking News

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா ஆர்த்தி    தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுக்களை விவசாய பெருமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் அந்த மனுக்களின் மீதான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 



மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த முகாமில் கூட்ட அரங்கிற்கு வந்த விவசாய பெருமக்கள் தங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 

மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாய பெருமக்களிடம் இக்கூட்டத்தில் தெரிவித்ததாவது விவசாய பெருமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியத்தையும் மற்றும் நலன்களையும் தெரிந்துகொண்டு அனைவரையும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பு ஊசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வேளாண்மை துறை சார்பாக உழவர்களின் நலன் பேணி காக்க “ உழவன் செயலியும் அதன் பயன்களும்” மற்றும் “நுண்ணீர் பாசனம்” என  இரண்டு கையேடுகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப.,  அவர்கள் வெளியிட வேளாண்மை இணை இயக்குனர் திருமதி.கோல்டி பிரேமாவதி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தமிழ் நாடு அரசின் மூலம் செயல்படுத்தி வரும் பல்வேறு வேளாண்மை துறை சார்ந்த  திட்டங்களை தெரிந்துகொண்டு அதனைப் பெற்று பயனடையுமாறு விவசாய பெருமக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு இரா.பன்னீர்செல்வம், இணை இயக்குனர் திருமதி.கோல்டி பிரேமாவதி, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் திருமதி.லட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு. கணேசன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் உள்ளனர்.


No comments

Thank you for your comments