பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை
காஞ்சிபுரம்:
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடிகளான
1) ரவி ( 29 ) த/பெ.பாஸ்கர், எண்.59 A, பல்லவர்மேடு மேற்கு, காஞ்சிபுரம்,
2) ஞானம் ( எ ) சதீஷ்குமார் ( 28) த/பெ.கஜேந்திரன், எண்.158 D, S.N. ஓடைத்தெரு, பெரிய காஞ்சிபுரம் மற்றும்
3) ரமேஷ் ( எ ) அலி ரமேஷ் ( 35 ) த/பெ.கமலக்கண்ணன், எண்.3, புதுத்தெரு, செவிலிமேடு, காஞ்சிபுரம்
ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச - ன்படி சிவகாஞ்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர் காஞ்சிபுரம் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பிததுள்ளார்கள்.
No comments
Thank you for your comments