திருவள்ளூரில் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு துவக்க விழா
திருவள்ளூர் :
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பங்கேற்பு.
திருவள்ளூர் காக்களூர் செல்லும் சாலையில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மைக்கேல் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிறுவனர் லியோ நெல்சன், மாநில நிர்வாகி பாஸ்டர் சுரேஷ் ஜோஸ்வா, ரூவா ஊழியங்களின் நிறுவனர் ஆல்வின் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ அசோகன், கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments