காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள்
காஞ்சிபுரம் :
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி, பள்ளிக்கட்டிடம், நியாயவிலை கட்டிடம் ஆகியவற்றை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமப்புறங்களில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அதன்படி காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் ஓட்டிவாக்கம் ஊராட்சி கூத்திரமேடு கிராமத்தில் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கபடி விளையாட்டுக்கான உள்விளையாட்டு அரங்கம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கவும், முசரவாக்கம் கிராமத்தில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கிடங்குடன் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் கிராம மக்கள் முன்னிலையில்அடிக்கல் நாட்டினார்.
முசரவாக்கம் கிராமத்தில் 15.47லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட அரசுப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம், 13.80லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முத்தவேடு கிராமத்தில் கட்டிமுடிக்கப்பட்டபுதிய நியாய விலை கட்டிடத்தையும் காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சீனிவாசன், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments