அரசியலமைப்பு உரிமை கல்வி திட்டம் துவக்கவிழா
தருமபுரி, ஆக.23-
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் போயர் காலணியில் அரசியலமைப்பு உரிமை கல்வி திட்டம் துவக்கவிழா நிகழ்வு இணைய வழியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து திருநெல்வேலி வான்முகில் நிறுவன இயக்குநர் பிரிட்டோ திட்டம் செயல்பாடு பற்றியும் விளக்கம் அளித்தார் பின்னர் முனைவர் வசந்தி தேவி, பேராசிரியர் தேவசகாயம் ஜவஹருல்லா மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயசந்திரன். மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ராமராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோதங்கராஜ் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியில் பிரியா நன்றியுரை கூறினார்
இத்திட்டம் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி பருவத்தில் குழந்தைகளுக்கு அடிப்படை சட்டம் சார்ந்த பயிற்சிகள், உளவியல் பயிற்சிகள், குட் டச், பேட் டச், சுற்றுசூழல் இயற்கை வேளாண்மை குழந்தை உரிமைகள் மனித உரிமைகள் மனித உரிமைகள் போன்ற அடிப்படை பயிற்ச்சிகள் கற்பிக்கப்படும் இது மாலைநேரம் வாரத்தில் 1 நாள் 2 மணிநேரம் தன்னார்வளர்களால் நடத்தப்படும் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் தாலுக்கா 10 மலை கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
மேலும் குழந்தை திருமனம், குழந்தை தொழிலாளர், முறையாக ஒழிக்க மாணவர்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பண்புள்ள மனித நேயமிக்க மாணவர்களை உருவாக்க முடியும் என மாவட்ட ஒருங்கினைப்பாளர் செந்தில்ராஜா தெரிவித்தார் இந்த துவக்க நிகழ்வில் தருமபுரி இளஞ்சிறார் நீதி குழும உறுப்பினர் ரவி மற்றும் DNC தொண்டு நிறுவன இயக்குநர் ஜி. கோவிந்தசாமி மன்ற ஒருங்கினைப்பாளர் முத்துமாரி மற்றும் பலர் பங்கேற்றனர்

No comments
Thank you for your comments