Breaking News

விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 


வரும் 24-08-2021 அன்று அறிவியல் பிரிவுகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கும்

 26-08-2021 அன்று கலை பிரிவுகளுக்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகம் போன்ற பாடப்பிரிவுகளுக்கும் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் சார்ந்த துறைகளிலிருந்து தகவல்கள் மின்னஞ்சல் மூலம், குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் கண்டிப்பாக மாணவர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களுடனும், முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு 28-08-2021 அன்று அறிவியல் பிரிவுகளுக்கும்

 31-08-2021அன்று கலை பிரிவுகளுக்கும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தி: ஆர்.காமராஜ், விருத்தாசலம்

No comments

Thank you for your comments