Breaking News

667 அமைப்பு சார தொழிலாளர்களுக்கு 25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

விருத்தாசலத்தில் 667 அமைப்பு சார தொழிலாளர்களுக்கு  25 லட்சம் மதிப்பில்   நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு  அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தம்பிகை தொழில் பயிற்சி மையத்தில் அமைப்பு சார  தொழிலாளர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு, கடலூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர்  ராதாகிருஷ்ணன்  முன்னிலையில்  தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

முன்னதாக கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை துவக்கி வைத்தார் 

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நகரில்  21.8.2021 அன்று நடைபெற்ற  தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திலுள்ள 341 தொழிலாளர்களுக்கு 10 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் இதர 15 நல வாரியங்களிலுள்ள  303 தொழிலாளர்களுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பீட்டிலும்,  தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தை சேர்ந்த   23 தொழிலாளர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 667 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 லட்சத்து 80 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  விருத்தாசலம்  சார் ஆட்சியர் அமித்குமார், தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன், தொழிலாளர் நல  இணை இயக்குனர் நலப்பணிகள் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் சுகாதாரம் வீரா, தொழிலாளர் உதவி ஆணையர் ராமு, மற்றும் அரசு அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்

செய்தி: ஆர்.காமராஜ், விருத்தாசலம்

No comments

Thank you for your comments