கன்னியாகுமரிலிருந்து டெல்லி வரை மிதிவண்டி பேரணி...
ஈரோடு:
கன்னியாகுமரிலிருந்து டெல்லி வரை மிதிவண்டி பேரணி செல்லும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு 28.08.2021 அன்று மாலை 5 மணி அளவில் கொங்கு பொறியியல் கல்லூரி என்.சி.சி மாணவர்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய மக்களின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதனை முன்னிட்டு கன்னியாகுமரிலிருந்து டெல்லி வரை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மிதிவண்டியில் பேரணியாக செல்கின்றனர்.
இப்பேரணி 60 போலீசாருடன் கடந்த 22.08.2021 அன்று கன்னியாகுமரியில் தொடங்கியது. இப்பேரணி கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக டெல்லி ராஜ்கோட்டிற்கு காந்தி ஜெயந்தியான 02.10.2021 அன்று செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு அசிஸ்டன்ட் கமாண்டர் சந்தீப் தலைமை வகிக்கிறார். இப்பேரணிக்கு தேவையான ஏற்பாடுகளை, தமிழ்நாடு காவல்துறை சார்பில், மாநில காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்கள் செய்து உள்ளார்.
28.08.2021 அன்று மாலை 5 மணி அளவில் பெருந்துறைக்கு வரும் இப்பேரணிக்கு கொங்கு பொறியியல் கல்லூரி என்.சி.சி மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்ப பட உள்ளது.
இவ்வரவேற்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன், கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன் மற்றும் முதல்வர் வி.பாலுசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இப்பேரணியினர் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
No comments
Thank you for your comments