அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல் - போக்குவரத்து கடும் பாதிப்பு
விருத்தாசலம் :
விருத்தாசலத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளனாது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பூதாமூரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
தற்போது விருதாச்சலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் தங்கள் விளை நிலங்கள் விளைந்த நெல் விற்க முடியாமல் தவித்து வரும் நிலையில் திடீரென்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் ஆதி தலைமையிலான போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது
No comments
Thank you for your comments