Breaking News

வேப்பூர் அருகே பைக் திருட்டு - வைரலாகும் வீடியோ

திருட்டு நடைபெறும் சிசிடிவி  வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்


கடலூர்:

வேப்பூர் வட்டம் சிறுப்பாக்கம் அடுத்த மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன் இவர் மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர்.

இவர் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் மலையனூரில் உள்ள அவரது வீட்டு வாசலில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கியுள்ளார். அதிகாலை 6 மணியளவில் தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தி சென்ற பைக்கை காணவில்லை. 

இதனையடுத்து, அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில்,  தனது வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் முகக்கவசம் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் சைடுலாக்கை காலால் உடைத்து பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது .

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் தனது பைக்கை கண்டுபிடித்து தருமாறு சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments