அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள டி,வி, புத்தூர் கிராமத்தில் அடிப்படையில் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதிமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள டி,வி, புத்தூர் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாக்கடை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டுவந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதிமக்கள் புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் கோரிக்கை மனு கொடுத்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கோரி திடீரென்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வாரத்திற்குள் மேற்கண்ட கழிவுநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரவில்லை என்றால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.
✒செய்தி ஆர்.காமராஜ் விருத்தாசலம்



No comments
Thank you for your comments