Breaking News

உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நிகழ்வு...!

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி கிராமத்தில் இன்று (29.08.2021), உலக விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் போட்டி நிகழ்வு நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செந்தில்நாதன் செகண்ட் இன் கமெண்டெட் சிஆர்பிஎஃப் தமிழ்நாடு மற்றும் எஸ்.பாபு சமூக சேவகர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் செந்தில்நாதன் பேசுகையில்,

தற்போது குழந்தைகள் கொரானாே வைரஸினால் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமென்றால் விளையாட்டு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.



அதிலும் தமிழ் விளையாட்டான சிலம்பும் விளையாட்டு நன்றாகவே இருக்கிறது. இந்த விளையாட்டில் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இந்த தற்காப்பு கலையை கற்க வேண்டும். அதே சமயத்தில், இதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  பிறகு சான்று கோப்பைகளை வழங்கினார் 

இந்த விழாவில் சிலம்பம் வகுப்பின் ஆசிரியர் தமிழச்சி பிரீதா ராசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் காசிநாதன் குருமூர்த்தி அனவை சரவணன் தலித் இளங்கோ கோட்டீஸ்வரன் முனிவேல் கௌதமன் மற்றும் ஊர் பெரியவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்து வாழ்த்திச் சென்றனர்.


No comments

Thank you for your comments