காட்பாடியில் லாரி மோதி மின்கம்பம் சேதம் பெரும் விபத்தை தவிர்த்த உதவி ஆய்வாளர்!
வேலூர் :
காட்பாடியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடைபட்ட போக்குவரத்தை உதவி ஆய்வாளர் உடனடியாக சீரமைத்தார்.
காட்பாடி&குடியாத்தம் சந்திப்பில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் விளக்கு கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதியதால் அந்த மின் விளக்கு கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் சாலையின் குறுக்கே விழுந்த மின் விளக்கு கம்பத்தை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி தடைபட்ட போக்குவரத்தை மிகத்துல்லியமாக சரிசெய்தார். இதனால் கருணையின் நிறம் காக்கி என்பதை உதவி ஆய்வாளர் பரசிவம் நிரூபித்துள்ளார். மக்கள் நலனில் அக்கரை கொணடு செயல்பட்ட காட்பாடி உதவி ஆய்வாளர் பரமசிவத்தை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டினர். பலர் இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறி அவருக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.மின் கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்தி விபத்து ஏதும் நடைபெறாமலும், அசம்பாவிதம் ஏற்படாமலும் பரமசிவம் எஸ்ஐ நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments