தேர்தல் பிரசார வழக்கு : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்
நாகர்கோவில் :
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்து மகா சபா ஆதரவு தெரிவித்திருந்தது. பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இந்து மகா சபை தலைவர் பாலசுப்பிரமணியன் பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ராஜாக்கமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இந்து மகா சபா தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், “இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்க வேண்டும்” என்று கூறினார். இது தேர்தல் விதியை மீறியதாக கூறி தேர்தல் அதிகாரி ராஜசேகர் புகார் செய்தார்.
இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து மகாசபா தலைவர் பால சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மகா சபா தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்கள். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments
Thank you for your comments