மூதாட்டியை ஏமாற்றிய வீஏஓ மீது நடவடிக்கை எடுப்பாரா சார் ஆட்சியர்?
விருதாச்சலம், ஆக.17-
அனுமதி இல்லாமல் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காரணமான வீஏஓ வை பணி நீக்கம் செய்யக்கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மூதாட்டி போராட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எம்.வீரட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நீலாவதி (வயது 80) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் சக்கரவர்த்தி ஆதரவில் நீலாவதி வசித்து வருகிறார்.
இந்நிலையில், முதனை கிராமத்தில் நீலாவதி பெயரிலுள்ள என் 54/5சி2- 68 சென்ட் நிலத்தை அவருடைய இளைய மகன் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகன் சிவானந்தன் ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து முதனை விஏஓ ராமச்சந்திரன் அவர்களுக்கு அதிகமாக பணம் கொடுத்து நீலாவதி பெயரில் உள்ள சொத்தில் அடங்கிய பட்டாவில் ராஜேந்திரன் மகன்களாகிய சிவானந்தம், அஜித்குமார், வருண்குமார் ஆகிய 3 பேரின் பெயரில் பட்டா மாற்றிக் கொண்டதாகவும், இது சம்பந்தமாக மகன் ராஜேந்திரன் மற்றும் முதனை விஏஓ ராமச்சந்திரன் ஆகியோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், விஏஓ வேலையை விட்டு நீக்க கோரி நீலாவதி மற்றும் அவரது உறவினர்கள் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
பின்பு அங்கு வந்த விருத்தாசலம் போலீசார், வட்டாச்சியர் சிவகுமார் ஆகியோர் நீலாவதி இடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால், அப்பகுதியில் சிறிது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


No comments
Thank you for your comments