Breaking News

18 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு

சென்னை 

18 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100க்கு குறைவாக இருந்தாலும், மாவட்ட வாரியாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில கொரோனா தொற்று சராசரியான 1.2 சதவீதத்தை விட 18 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அங்கு நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

No comments

Thank you for your comments