Breaking News

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு!

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பதிவு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான ஐம்பொன் சிலைகள், தங்க நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கோயில் பொக்கிஷத்தில் உள்ள பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில், 16 உற்சவ திருமேனிகள் கணக்கில் வராமல் உள்ளது என தெரிய வந்தது.

இது தொடர்பாக ஏற்கனவே பல முறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள், கோவியில் வளாகத்தில் உள்ள இரட்டை திருமாளிகையில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.

No comments

Thank you for your comments