Breaking News

இணைப்பு சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

குமரி, ஆக.19-

ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுமித்தேரி விளாகம்- கல்லடித்தோப்பு இணைப்பு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணியை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.



கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொல்லங்கோடு பேரூராட்சியில் உள்ள  நீரோடி பகுதியில் ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே கொல்லங்கோடு பேரூராட்சியால் கட்டப்பட்டுள்ள சுமித்தேரி விளாகம் - கல்லடித்தோப்பு இணைப்பு பாலமானது இரண்டு பக்கங்களிலும் இணைப்பு சாலைகள் இல்லாமல் பல வருடங்களாக அந்தரத்தில் நின்றது. 

இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையிலும்,  பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக இடம் பெயர முடியாத நிலையிலும் காணப்பட்டனர். மேலும் இப்பகுதியில் உள்ள நோயாளிகள், பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அனைவரும் தினமும் தங்களது  அன்றாட தேவைகளுக்கு பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை காணப்பட்டது. நீண்ட நாட்களாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். 

இதனால் இப்பகுதி பொதுமக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் சுமித்தேரி விளாகம் - கல்லடித்தோப்பு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் இணைப்பு சாலைகள் அமைத்து தர வேண்டும் என்று கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். 

இதையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. இந்த பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் இணைப்பு சாலைகள் அமைக்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்ததையெடுத்து இணைப்பு சாலை அமைக்க ரூபாய் 40 -லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதனையடுத்து பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணியை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கொல்லங்கோடு பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெஜீஸ், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிறிஸ்டோபர், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் அருளானந்தம், ஜெரோம், பங்குதந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments