வரதட்சணை கொடுமையால் இளம் பெண் மரணம் - வாலிபர் கைது
தருமபுரி:
வரதட்சணை கொடுமையால் இளம் பெண் இறந்து போன வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16.08.2019 ஆம் தேதி மாலை தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கோட்டப்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் கிணற்றில் விழுந்து இறந்து போன இளம் பெண் மீனா வயது 19 க/பெ கார்த்திக் என்பவர் இறப்பு குறித்து மீனாவின் தந்தை சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் களாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தபுகாரின் பேரில் குற்ற எண் 194/2021 u/s 274(3)-ன்CPC-ன் படி வழக்குப்பதிவு செய்து இறந்து போன இளம் பெண் திருமணம் ஆகி 7 ஆண்டுக்குள் ஏற்பட்ட இறப்பு என்பதால் வழக்கு விசாரணையை கி. ராஜா சோமசுந்தரம் காவல் துணை கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு தர்மபுரி (பொறுப்பு) அரூர் உட்கோட்டம் விசாரணை செய்தும் கரூர் கோட்டாட்சியர் அவர்களின் விசாரணையிலும் இறந்துபோன இளம்பெண் மீனா அவரது கணவர் கார்த்திக் தகப்பனார் பெயர் சுப்பிரமணி வேலனூர் கிராமம் என்பவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் மீனா கிணற்றில் விழுந்து இறந்துள்ளது, விசாரணையில் தெரியவந்தது.
இதனடிப்படையில், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் கார்த்திக் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

No comments
Thank you for your comments