கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது ஒலிம்பிக்
அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா
சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம்
48 வது இடத்தில் இந்தியா
டோக்கியோ, ஆக.8-
32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று (08.08.2021) நிறைவடைந்தது. போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் நிறைவு விழா நடைபெற்றது.
விழாவில் வண்ண லேசர் காட்சிகள், வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றார்.
நிறைவு விழாவில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். விழாவின் முடிவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024ம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் (08.08.2021) நிறைவடைந்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்று முடிந்து விட்டன.
கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறின. போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.
முதலிடம் பிடித்த அமெரிக்கா
அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது. இன்று மட்டும் அமெரிக்கா 3 தங்கம் வென்றது. மொத்த பதக்க பட்டியலிலும் முதலிடம், அதிக தங்கம் வென்ற பட்டியலிலும் முதலிடம் பிடித்தது அமெரிக்கா.
2வது இடத்தில் சீனா
38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்தது.
3வது இடத்தில் ஜப்பான்
போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது.
48வது இடத்தில் இந்தியா
ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.Still processing this feeling. To all of India and beyond, thank you so much for your support and blessings that have helped me reach this stage.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 8, 2021
This moment will live with me forever 🙏🏽🇮🇳 pic.twitter.com/BawhZTk9Kk
#Tokyo2020
— RAHUL GUPTA 🇮🇳 (@Rahul__1207) August 8, 2021
Congratulations! 7 Medals India won in Tokyo Olympics, made nation proud 🇮🇳.
1 Gold 🏅
2 Silver🥈
4 Bronze 🥉#Cheer4Indiia#TeamIndia#TokyoOlymics #IND pic.twitter.com/C1lEcCFF97
The Olympic spirit is in all of us.
— Olympics (@Olympics) August 8, 2021
A display of beautiful, luminous colours swirl together, representing the many flags of the world.
They form the Olympic Rings, a timeless symbol of unity. #StrongerTogether #Tokyo2020 #ClosingCeremony pic.twitter.com/38dv0e0w98
🎆🎆🎆 Incredible fireworks to end the @Tokyo2020 #ClosingCeremony.#StrongerTogether pic.twitter.com/NQf5NsJa3t
— Olympics (@Olympics) August 8, 2021
GOOSEBUMPS! The Olympic Flame has been extinguished! 😍🤩
— Olympics (@Olympics) August 8, 2021
But the Olympic spirit we've witnessed at @Tokyo2020 will keep burning bright.
Even when we are far apart, we are all connected and #StrongerTogether.#ClosingCeremony #Tokyo2020 pic.twitter.com/0Bqr7aRpZC
Tokyo 2020 🤝 Paris 2024
— Olympics (@Olympics) August 8, 2021
The @Tokyo2020 Olympic Games may be coming to an end, but the spirit of the Olympics is carried on by @Paris2024.
#StrongerTogether | #ClosingCeremony pic.twitter.com/QcE9bMDJY4
Wholesome content klaxon!😊
— Olympics (@Olympics) August 8, 2021
In the spirit of omotenashi, the floor of the stadium is transformed into a grassy field for the athletes to relax.
It is a deep-rooted culture in Japan, meaning to wholeheartedly look after guests. #StrongerTogether #ClosingCeremony #Tokyo2020 pic.twitter.com/a3cZ1t56zx






No comments
Thank you for your comments