தேனீகூட்டை கல்லால் எறிந்ததால் உருவான சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா - வரலாறு சொல்லும் உண்மை
புதுடெல்லி:
சிறு வயதில் ஜாலியாக உயரமான இடத்தில் உள்ள தேனீகூட்டை கல்லால் எறிந்தால் இன்று சரித்திர நாயகனா உருவெடுத்துள்ளார் தங்க மகன் நீரஜ் சோப்ரா.
சிறு வயதில் ஜாலியாக உயரமான இடத்தில் உள்ள தேனீகூட்டை கல்லால் எறிந்து கலைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதை கவனத்தில் கொண்ட அவரது தந்தை சதீஷ்குமார் அவரை ஒழுக்கமானவராக வளர்க்க விரும்பி ஈட்டி எறிதல் விளையாட்டில் பழக்கப்படுத்தினார்.
2011-ம் ஆண்டில் இருந்து ஈட்டி எறிதலில் பயிற்சியை தொடங்கி படிப்படியாக வெற்றிகளை குவித்தார்.
2016-ம் ஆண்டு உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் (20 வயதுக்குட்பட்டோர்) 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி சாம்பியனாகி வியக்க வைத்தார். இந்த போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் இவர் தான்.
அதன் பிறகு 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார்.
2019-ம் ஆண்டு முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்தாலும் அதில் இருந்து மீண்டு வந்து சாதித்து இருக்கிறார்.
இந்த வெற்றியை நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரில் திருவிழா போல் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீரஜ் சோப்ரா ராணுவத்தில் பணியாற்றுவதால் ராணுவ வீரர்களும் உற்சாகத்தில் திளைத்தனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தேசிய கொடிகளை அசைத்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் கொண்டாடினர்.


No comments
Thank you for your comments