Breaking News

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், ஆக.30- 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நூதன முறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம்,  பாரத ஸ்டேட் வங்கி அருகில் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பில்  பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை  உயர்த்தும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து  கண்டன ஆர்பாட்டம்,  விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் தலைமையில் நடைபெற்றது 

ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மணிவாசகம், மக்கள் விடுதலை இயக்கம் ராமர், கம்மாபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளராக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ் கலந்துகொண்டு கண்டு சிறப்புரையாற்றினார்

ஆர்பாட்டத்தின் போது  சிலிண்டருக்கு மாலை அணிவித்து பட்டை நாமம் போட்டு விறகு அடுப்பு வைத்து நூதன முறையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள்  அதிகாரம் அமைப்பினர் ஆர்பாட்டத்தில்  கலந்து கொண்டனர்.

செய்தியாளர் காமராஜ்

No comments

Thank you for your comments