கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கடலூர்:
கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், வேப்பூர் தாலுக்கா அடரி, மாங்குளம் ஊராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, ஊராட்சி மன்றதலைவர் மஞ்சுளா தங்கதுரை தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக மங்களூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கலந்துகொண்டு கொடியசைத்து நிகழ்சியை துவக்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் துணைதலைவர் மல்லிகா, ஊராட்சி செயலர் பூமாலை மற்றும் மகளிர் குழுவினர் உடன் இருந்தனர்
அதுபோல் அடரி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அனிதா கமல்காந்த் தலைமை தாங்கினார், மங்களூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் சபரியா ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments