Breaking News

காதலித்து ஏமாற்றிய காதலனை கரம் பிடித்த காதலி - மகளிர் காவலர்கள் முன்னிலையில் திருமணம்

விருத்தாசலம்

 காதலித்து ஏமாற்றிய காதலனை போரடி கரம் பிடித்துள்ளார் காதலி  சுகுணா. விருத்தாசலம் மகளிர் காவலர்கள் முன்னிலையில் திருமணம் நிடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னாத்துக்குறிச்சியை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சுகுணா(26). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியாராக பணிபுரிந்து வருகிறார்.

அரியலூர்  மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் பெரியாத்துக்குறிச்சியை சேர்ந்த மாயவேல் மகன் மணிவேல்(27). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இருவரும் பள்ளிப்பருவத்திலிருந்து சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேலை தேடி, சென்னையில் பணிபுரிந்து வந்தனர்... இந்நிலையில் கொரோனா காலம் என்பதால், விடுமுறையில் இருவரும் வேலை இல்லாமல் வீடு திரும்பினர். 

தற்பொழுது மணிவேல் என்பவருக்கு அவரது சொந்தத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்திருக்கின்றனர். 

இத்தகவலை அறிந்து சுகுணா, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் மணிவேல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் மணிவேலுவிடம் விசாரணை மேற்கொண்டு  சமாதானம் செய்துவைத்து, காவல் நிலையத்தின் அருகே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கு அழைத்து வந்தனர் 

திருமணத்துக்கு மறுத்த மணிவேல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது...

காதலன் ஏமாற்றி விட்டான் என்று வாழ்க்கையை ஏமாற்றி கொள்ளாமல், தவறான முடிவு ஏதும் எடுக்காமல், துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் அளித்து போராடி காதலனை கரம் பிடித்துள்ளார் சுகுணா... திருமணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... 

No comments

Thank you for your comments