செய்தியாளர்களை புறக்கணிப்பு செய்யும் கே.வி.குப்பம் சார் பதிவாளர் கவிதா!
வேலூர், ஆக.11-
செய்தியாளர்கள் யாரும் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் வரக் கூடாது என்று புறக்கணிப்பு செய்து சக ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் கே.வி.குப்பம் சார் பதிவாளர் கவிதா.
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் சார் பதிவாளர் அலுவலகம் ஒரு வில்லங்கமான பகுதியாகும். இங்கு சத்தமின்றி வாரி சுருட்டி வருகிறார் சார் பதிவாளர் கவிதா. இவர் வேலூரில் இருந்து கே.வி.குப்பத்துக்கு வந்து சென்றுவிடுகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இங்கேயே பணியாற்றி வருகிறார். இவர் புரோக்கர்கள் இன்றி பணியாற்ற மாட்டார். கே.வி.குப்பத்தில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள கடைகளில் உட்கார்ந்திருக்கும் புரோக்கர்கள்தான் கவிதாவுக்கு பணம் வசூல் செய்து தருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இந்த புரோக்கர்கள் வாயிலாக சென்றால் பணி எளிதில் முடித்து தருகிறாராம் கவிதா.
இப்படி பணம் இருந்தால் உள்ளே வாருங்கள், இல்லையெனில் வெளியில் செல்லுங்கள் என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக பொதுமக்களை உதாசீனப்படுத்துவது, அநாகரீகமாக பேசுவது என்று இவரது நடவடிக்கைகள் எல்லைமீறி ஏன் அத்து மீறி உள்ளது என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கு என்ன பலம் என்றால் தான் ஒரு பெண் என்பதால் தன் மீது பலர் இறக்கம் காண்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். இதன் விளைவாக கவிதா தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நடைமுறையாக்க பார்க்கிறார். இந்நிலையில் நேற்று கே.வி.குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை வெளியில் செல்லுங்கள், நீங்கள் யாராக இருந்தாலும் சரி உடனடியாக வெளியில் செல்ல வேண்டும் என்று அதட்டி விரட்டியடிக்கிறாராம்.
செய்தியாளர்களை உள்ளே சேர்க்க வேண்டாம் என்று சக ஊழியர்களுக்கு ஒரு வாய்மொழி உத்தரவும் பிறப்பித்துள்ளாராம் கவிதா. இதனால் செய்தியாளர்கள் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாயினர். ஒரு அரசு அலுவலகத்துக்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பது தவறு என்று தெரிந்தும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கிறார் கவிதா. தன்னை ஒரு சம்பல்ராணி பூலான்தேவி போன்று நினைத்து கொண்டு செயல்படுகிறார். இவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும். கே.வி.குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தால் உண்மை வெளிவரும்.
இதுபோன்ற சார் பதிவாளர்கள் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனபதே ஒட்டுமொத்த செய்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு அலுவலகத்துக்குள் செய்தியாளர்களை வரக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் இவருக்கு வழங்கப்படவில்லை. காற்றுபுக முடியாத இடத்தில் செய்தியாளர்கள் நுழைந்து விடுவார்கள் என்று சொல்லுவதுண்டு. ஆனால் இங்கோ நிலைமை தலைகீழாக உள்ளது. பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.வி.குப்பம் சார் பதிவாளர் கவிதா மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் இவர் வாரி குவித்த சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவரது இல்லம் மற்றும் அவரது உறவினர் இல்லங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. பத்திரப்பதிவுத்துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments
Thank you for your comments