Breaking News

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம்-தலிபான் தகவல்

காபூல் :

பாகிஸ்தான் தலிபான் ஆட்சியை அங்கீகரித்ததால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தலிபான் அமைப்பு தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ராணுவம் பெரிதாக எதிர்ப்பை காட்டாத நிலையில், சண்டையில்லாமல் ஆட்சியை பிடித்துள்ளது. ராணுவம் அவர்கள் கைவசம் வந்துள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசுக்கு அதிக அளவிலான ஆயுதங்களை வழங்கியிருந்தது. இந்த ஆயுதங்கள் அனைத்தையும் தற்போது தலிபான்கள் கைவசம் வந்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆகவே, காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியாகின.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து தலிபான்கள் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவலில் ‘‘காஷ்மீர் இருதரப்பின் உள்நாட்டு பிரச்சினை. அதில் கவனம் செலுத்த வாய்ப்பில்லை’’ என்று தலிபான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும், ஆனால், நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்த வாய்ப்பில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, லஷ்கர்-இ-ஜாங்வி போன்ற அமைப்புகள் தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் இணைந்து சில கிராமங்களில் செக் போஸ்ட் அமைத்துள்ளது.

தலிபான்கள் ராணுவத்தின் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேலான ஆயுதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவத்தையும் தலிபான் பயன்படுத்துகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதை அடுத்து பீதியடைந்த அரசு ஊழியர்கள் அப்படியே அலுவலகத்தை போட்டு விட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

தலிபான்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் கருதினார்கள். இந்த நிலையில்  தலிபான்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில், ‘‘அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்பி வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறி உள்ளனர்.

அதே நேரத்தில் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் தொடர்பாக தலிபான்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே ராணுவத்தில் இருந்தவர்கள் மரண பீதியில் இருக்கிறார்கள்.

No comments

Thank you for your comments