Breaking News

ஆப்கானிஸ்தானில் சுவரில் வரையப்பட்டுள்ள பெண் சித்திரங்களை அழிக்கும் தலிபான்கள்

காபூல் :

ஆப்கானிஸ்தானில் சிகை அலங்கார நிலையம் முன் வரையப்பட்டுள்ள பெண் சித்திரங்களைத் தலிபான்கள் வெள்ளையடித்து மறைக்கும் புகைப்படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.


தாலிபான்கள் ஆட்சியில் பெண் சுதந்திரத்தை சிதைக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் முன்பு இழந்ததும் ஏராளமானப் பெண்கள் படித்து பட்டதாரிகளாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னேறினர்.


பெண்களின் உரிமைகள் இனி பாதுக்காக்கப்படும் எனத் தற்போது தாலிபான் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ள நிலையில், பெண் ஓவியங்களை தலிபான்கள் அழிக்கும் காட்சி பெண்கள் மனதில் அச்சத்தை விதைத்துள்ளது.

No comments

Thank you for your comments