Breaking News

ஆன்லைன் ரம்மி : தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 

தமிழகத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் செல்லாது என அறிவிக்க கோரியும் ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டம், முழுமையாக இல்லாமல்,போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், செல்லாது என உத்தரவிட்டனர். மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


No comments

Thank you for your comments