Breaking News

ஆண்களுக்கு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை :

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வது போல அரசு பஸ்களில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. மாநகர பஸ்களில் இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


தமிழக மாநகர பஸ்களில் ஆண்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என இருக்கும் நிலையில், ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும், உள்ளூர் அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயண வசதி எனக் கூறிவிட்டு, அதனால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் (02.08.2021) அறிக்கை ஒன்றை வெளியிட்டு குற்றம்சாட்டி இருந்தார்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வது போல அரசு பஸ்களில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. 

ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்  பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது. சாதாரண நகரப் பேருந்துகளில் இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவச பயணம் செய்துள்ளனர்.


No comments

Thank you for your comments