மீன்வளர்ப்பு தொழில் புரிவோருக்கு மானியம் உதவி அறிவிப்பு
வேலூர் :
2021-22-ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை விரிவுப்படுத்திட மானியம் வழங்கும் திட்டத்தில் (Subsidy assistance for expansion of fish culture in Tamilnadu) ஒரு ஹெக்டேரில் ( 2.47 ஏக்கர்) ரூ.7.00 இலட்சம் செலவு செய்து மீன்குளம் அமைத்திட 50% மானியமாக ரூ.3.50 இலட்சம் மற்றும் ஒரு ஹெக்டர் நீர்பரப்பில் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினத்திற்கான தொகையான ரூ.1.50 இலட்சத்தில் 40% மானியமாக மொத்தம் ரூ.60,000/- பின்னேற்பு மானியமாக (Back ended subsidy) அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் 0.25 ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை உள்ள பரப்பில் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
மீன்வளர்ப்பு குளங்கள் புதியதாக அமைக்க பயனாளி சொந்த நிலம் அல்லது 5 வருட குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் வேலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
வேலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக முகவரி
மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர்,
எண். 16, 5 வது மேற்கு குறுக்கு தெரு,
காந்திநகர், காட்பாடி,
வேலூர் - 632 006.
தொலைபேசி எண். 0416 - 2240329, 9384824248
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டம்.

No comments
Thank you for your comments