நம்ம டாய்லெட் பழுது நீக்கப்படுமா? - பொதுமக்கள் கோரிக்கை...
பூவிருந்தவல்லி, ஆக.19-
ஆவடி பகுதியில் நம்ம டாய்லெட் திட்டம் பராமரிப்பின்றி இப்ப விழுமோ எப்ப விழுமோ என்ற நிலையில் அபாய கட்டத்தில் உள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கொடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான அதாவது மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள ஒன்றிய அரசு கொண்டு வந்த நம்ம டாய்லெட் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமலும் பாழடைந்த நிலையில் துர் நாற்றம் வீசுகின்ற வகையிலும், தற்போது இன்றைக்கோ நாளைக்கோ கீழே விழும் அபாய நிலையில் இருக்கிறது. கடந்த ஆட்சியில் பல செய்தித்தாள்களில் இதுகுறித்த செய்தி புகைப்படத்துடன் வெளிவந்தன. ஆனாலும் இதற்கு அப்போது உள்ள மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் முன்னாள் அமைச்சர் ம.பா.பாண்டியராஜனும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தி விட்டு சென்று விட்டனர்.
பொதுமக்கள் நலனில் துளி கூட அக்கரை செலுத்தாத அரசு அதிமுக அரசு என்று நிரூபித்து விட்டு சென்றுள்ளனர். இவர்கள் செய்யாத வேலைகளுக்கு வேலை செய்ததாக கூறி போலி பில்கள் மூலம் பல கோடிகளை சுருட்டி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தில்லுமுல்லு அதிகாரிகள் திருதிருவென்று விழிக்கின்றனர். செய்வதறியாது திகைக்கின்றனர். இந்த ஆட்சியில் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சாமு நாசர் நம்ம டாய்லெட்டை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பயன்படும் வகையில் சரி செய்து தர வேண்டும். இதனால் தினமும் ஆவடி மார்க்கெட்டுக்கு வருகை தரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நம்ம டாய்லெட் பயன்படும். ஆதலால் நம்ம டாய்லெட் திட்டத்தை விரைவில் போர்க்கால அடிப்படையில் சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அமைச்சரின் அதிரடி நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சொல்வதை செய்யும் அரசு வந்துள்ளது. சொன்னதை சொன்னவாறு செய்து தரும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.


No comments
Thank you for your comments