இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், ஆக.19-
இந்தியன் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் மெழுகு வர்த்தி ஏந்திக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் காஞ்சிபுரம் கிளை சார்பில் காஞ்சிபுரம் மேட்டுத் தெரு பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் உண்ணிக்கிருஷ்ணன் தலைமையில், வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியருக்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுத்திடவும், தற்காலிக ஊழியர்களுக்கு நியாமான ஊதியத்தை வழங்காத இந்தியன் வங்கியின் நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற திரளான வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் மெழுகு வர்த்தி ஏந்திக் கொண்டு கண்டன கோசங்களை எழுப்பியவாரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுசெயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

No comments
Thank you for your comments