இ பட்ஜெட் தாக்கல்...அதிமுக வெளிநடப்பு
சென்னை, ஆகஸ்ட் 13-
வழக்கமான முறையில் பட்ஜெட் ஆவணங்கள் அடுக்கப்பட்ட சூட்கேஸ் இல்லாமல் கையடக்க கணினியில் பட்ஜெட் ஆவணங்களை பதிவு செய்து சட்டசபைக்கு வந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
காகிதமில்லா முதல் இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்துள்ளார். எதிர்கட்சி தலைவர் பழனிசாமியும் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கத்துக்கு வருகை தந்துள்ளார்.
முதன்முதலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
காகிதமில்லா படஜெட்டை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் பேச வாய்ப்பு கேட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் பழனிவேல் தியாகராஜன்.
பேச வாய்ப்பு தரவில்லை எனக்கூறி பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க எம். எல்.ஏக்கள் வெளி நடப்பு செய்தனர்.
No comments
Thank you for your comments