Breaking News

பெட்ரோல் விலை குறைப்பு நாளை முதல் அமல்

சென்னை:   

பெட்ரோல் மீதான வரி குறைப்பு அமலுக்கு வருவது தொடர்பான அறிவிப்பை நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.


பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments