அரசு வளங்களை மீட்க வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு - அமைச்சர் பிடிஆர் சூப்பர் அறிவிப்பு
சென்னை:
நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் காரணமாக அரசுக்குச் சொந்தமான நிலங்களின் வளங்கள் உடனடியாக பயன்படுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.
இதைச் சரி செய்யப் புதிதாக வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்ட அனுபவமிக்க குழுவால் கண்காணிக்கப்படும்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலைவாணர் அரங்கில் தமிழக பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
அதில் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் காரணமாக அரசுக்குச் சொந்தமான நிலங்களின் வளங்கள் உடனடியாக பயன்படுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதைச் சரி செய்யப் புதிதாக வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்,
"2007ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தரவுகளின் படி தமிழ்நாட்டில் சுமார் 2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தனிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுநிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட அரசு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். அதில் அனைத்து அரசு நிலங்கள் குறித்த தகவல்களும் இடம்பெறும். இதன் மூலம் அரசு நிலங்கள் பயனற்று இருப்பதும், முறையற்று பயன்படுத்தப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும்.
நீதிமன்றங்களில் முக்கிய நிதி சார்ந்த வழக்குகள் பல ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ளன. அத்தகைய வழக்குகளைச் சிறப்பாகக் கையாள வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும் இதன் மூலம் பொதுநலன் சிறப்பாக பாதுகாக்கப்படும், அரசுக்குக்கு வளங்கள் உடனுக்கு உடன் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.
இந்த வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்ட அனுபவமிக்க குழுவால் கண்காணிக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்காணிப்பில் வழக்கு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்" என்றார்.
No comments
Thank you for your comments