Breaking News

அறிவிப்பை அத்துமீறும் வாகன ஓட்டிகளால் அவதி


திருப்பூர், ஆக.19-

திருப்பூர் அவிநாசி ரோடு பங்களா பேருந்து நிறுத்தம் அடுத்து பிஎன் ரோட்டை சந்திக்கும் ஒருவழி சாலையில் அறிவிப்பை அத்துமீறி செல்லும் வாகன ஓட்டிகளால் பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றன.


காவல்துறையினர் எவ்வளவுதான் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு, ஒருவழி சாலையில் செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு கொடுத்தாலும் அதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுகின்றனர். 

காவல்துறையினர் அறிவிப்பை அத்துமீறி செல்பவர்களால்,   ஒருவழி சாலையில் சரியாக கடந்து செல்லும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. 

இதுனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. நடைபாதை பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகின்றனர். 

அத்துமீறும் வாகன ஓட்களால் பெரும் விபத்தும் ஏற்படும் அவலநிலையும் நீடிக்கின்றன. 

No comments

Thank you for your comments