மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் எம்எம் அப்துல்லா போட்டி
புதுக்கோட்டை, ஆக.22-
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்திற்கு அடுத்த மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளது
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ. முகமதுஜான் மறைவால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் 23ம் தேதி காலமானர். இவருக்கு 24.7.2025 வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவிக்காலம் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ராஜ்யசபா அதிமுக எம்.பி.,க்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர் வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அவர்கள் தங்களது எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்தனர். அதனால் காலி இடங்கள் 3 ஆக அதிகரித்தது.
3 இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments