Breaking News

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை:

சென்னையில் 23.8.2021ம் தேதியிலிருந்து காலை 5.30 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் நீட்டித்து இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.


ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 23ம் தேதியிலிருந்து மெட்ரோ ரயில்கள் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலுல் ரயில்கள் இயக்கப்படும்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ரயில் இயக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



No comments

Thank you for your comments