Breaking News

ஸ்ரீரிஸ்டி பன்னாட்டு பள்ளியில் சுதந்திர தின விழா கோலாகலம்!

 காஞ்சிபுரம், ஆக. 17-

காஞ்சிபுரம் ஸ்ரீரிஸ்டி பன்னாட்டு பள்ளியில் பொதுப்பணி நீர் பாசனத் துறை இளம் பொறியாளர் மார்கண்டன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழா கோலாகலமாக நடந்தது.


காஞ்சிபுரம் 'வெள்ளை கேட்' பகுதியில் 'ஸ்ரீ ரிஸ்டி' பன்னாட்டுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சுந்திர தின விழா தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட பொதுப் பணி நீர்பாசனத் துறை இளம் பொறியாளர் மார்க்கண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

விழாவில் பள்ளி நிர்வாகிகள் மகேஸ்வரன், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் குறைந்த எண்ணிக்கையிலும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படித்து வரும் 'ஆன் லைன்' வகுப்புகளில் உள்ள நிறை - குறைகளைப் பற்றி பள்ளி நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்களிடம் கேட்டறிந்தனர். சுதந்திர தின விழா இனிதே தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

No comments

Thank you for your comments