புதிய விதிகளை கைவிடக்கோரி தங்க நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்...
காஞ்சிபுரம் :
மத்திய அரசின் புதிய விதிகள் ஆன ஹால்மார்க் அடையாள எண் பெறுவது குறித்த விதிகளை கைவிடக்கோரி காஞ்சிபுரம் தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கடந்த ஓராண்டாக தங்க நகை வியாபாரிகள் அனைவரும் ஹால்மார்க் முத்திரை பெற்று தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
இந்த நிலையில் மத்திய அரசு புதிய ஹால்மார்க் விதிகளை அமுல் படுத்தியுள்ளது. இதில் தங்க நகைகளுக்கு அடையாள எண் பதிவிட கட்டாயப்படுத்தி உள்ளது. நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தங்கநகைகள் அடையாள எண் பதிவிட போதிய வசதிகள் இல்லை என கூறி தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு கடை வியாபாரிகள் சங்கத்தினர் தலைவர் மோகன்லால் மற்றும் செயலாளர் குப்தா தலைமையில் இன்று தங்கள் கடைகளை அடைத்து HUID விதிகளை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி பதாகைகளை கையில் ஏந்தி கடை முன் நின்று மௌன போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் நகரில் கம்மாள தெரு செங்கழுநீர் ஓடை வீதி சேர்க்கப்பட்ட நடுத்தெரு காமராஜர் வீதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறு நகை வியாபாரி முதல் பெரிய நகைக் கடை வியாபாரி வரை இதற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்து இருந்தனர்.

No comments
Thank you for your comments