Breaking News

கொரோனாவால் ரயில்வேக்கு ரூ.36000 கோடி இழப்பு

ஜல்னா, ஆக.23-

தொற்றுநோய்களின் போது, சரக்கு ரயில்கள் பொருட்களை எடுத்துச் செல்வதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் முக்கிய பங்கு வகித்ததாக ரயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் கூறினார்.


மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா ரயில் நிலையத்தில் சுரங்கப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் ரயில்வே துறை இணை மந்திரி ராவ்சாகேப் தான்வே, கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக, ரயில்வேக்கு ரூ.36,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்கு ரயில்கள் மட்டுமே வருவாய் ஈட்டுவதாகவும் கூறினார்.

‘பயணிகள் ரயில் பிரிவு எப்போதும் நஷ்டத்தில் இயங்குகிறது. டிக்கெட் கட்டணத்தை அதிகரிப்பது பயணிகளை பாதிக்கும் என்பதால், அவ்வாறு செய்ய முடியாது. 

தொற்றுநோய்களின் போது, சரக்கு ரயில்கள் பொருட்களை எடுத்துச் செல்வதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் முக்கிய பங்கு வகித்தன’ என்றார் ராவ்சாகேப்.

புல்லட் ரயில் திட்டம் மும்பை-நாக்பூர் விரைவு பாதையில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.  

No comments

Thank you for your comments