Breaking News

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



விருத்தாசலம்:

அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் கோட்ட அலுவலகம் முன்பு இலாகாவின் அத்து மீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் கோட்ட அலுவலகம் முன்பு இலாகாவின் அத்து மீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்கால கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் விஷ்ணு விஜயன், சீனிவாசன் (எ) வாசு, விக்டர் பெரியநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு  50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலக்கின்றி இரக்கமின்றி நடத்தப்படும் மெகா, மேளாக்கள் நிறுத்தப்பட வேண்டும்;

பொது வணிகம் என்ற பெயரால் தோழர்கள் டார்ச்சர் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்;

மேலாளர்களின் பங்கு கொள்ளாத ஊழியர்கள் மிரட்டப்படும் போக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்;

புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணி நியமன ஆணையை உடனடியாக வழங்க வேண்டும்;

வாரிசு அடிப்படையில் பணி நியமனம் தருவதில் கலந்தாய்வு கூடாது;

ஊழியர்களின் அடையாள அட்டைகள் உடனடியாக வழங்க வேண்டும்;

IPPB மொபைல் போன்கள் பழுதானால் சரி செய்திட GDS நிறுத்தப்படவேண்டும்;பழுதான மொபைல்கள் IPPB நிறுவனத்தால் சரிசெய்யப்பட வேண்டும் 

என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்


No comments

Thank you for your comments