Breaking News

இலவச பட்டாக்களை ஆன்லைனில் பதிவு செய்ய கோரிக்கை

திருவள்ளூர், ஆக.22-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.  இந்த அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பட்டா வழங்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது போலி பட்டாக்கள் அதிகரித்து வந்த நிலையிலும் ஒரு பட்டாவிற்கு 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வாங்கிக்கொண்டு பட்டாக்களை வழங்குவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பொது மக்கள் முன்வைத்தனர். இதனை காலச்சக்கரம் நாளிதழில் 12.08.2021 அன்று செய்தியாக வெளியிட்டு இருந்தோம். 

இதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் திருவள்ளூர் மாவட்டத்தில் 18.08.2021அன்று 10 வட்டாட்சியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்தனர்.

இதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அமைச்சர் சாமு நாசர் 1600 பட்டாக்கள் வழங்கினார்.  இந்த பட்டாக்கள் உட்பட இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பட்டாக்களும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த பட்டாக்களை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதனை ஆய்வு செய்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments