பெட்டிக்கடையில் சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குளச்சல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சணல் குமார், குளச்சல் பகுதியில் காவலர்கள் சகிதம் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சந்தேகபடும்படியாக இருந்ததால் அந்த கடையை நடத்தி வருபவரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் வாணியகுடி பகுதியை சேர்ந்த வின்சிலின் பாபு(48) என்பது தெரியவந்தது.
பின்பு அவர் கடையை சோதனை செய்த போது, சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு, அவர் விற்பனை செய்வது தெரியவந்தது.
பின்பு அவரிடமிருந்த 60,000/- ரூபாய் மதிப்புள்ள 107 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் மற்றும் 13,260/- ரூபாயை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

No comments
Thank you for your comments