நகராட்சி அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு - பைப்புகள் பறிமுதல்
கடலூர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிகுட்பட்ட புதுக்குப்பம் பகுதியில், நகராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமலேயே வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி கொண்டிருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இத்தகவலின்பேரில் விரைந்து வந்த நகராட்சி ஆணையாளர் அருள்செல்வன், பொறியாளர் பாண்டு, மேலாளர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தபோது, முறைகேடான வகையில் குடிநீர் இணைப்பு பெற குழி தோண்டிக் கொண்டு இருந்தனர் என்பது அறிய வந்தது.
இதனையடுத்து, பைப்புகளை பறிமுதல் செய்து. தோண்டிய குழிகளை நகராட்சி நிர்வாகத்தினர் ஜெசிபி மூலம் மூடிவிட்டு, அனுமதியின்றி குழி தோண்டிய வீட்டின் உரிமையாளர்களை எச்சரித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது



No comments
Thank you for your comments