Breaking News

ரசாயனம் கலந்த மக்காச்சோளத்தை சாப்பிட்டு ஐந்து மயில்கள் உயிரிழப்பு...

கடலூர்:

ராமநத்தம் அருகே இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வயலில் கிடந்த ரசாயனம் கலந்த மக்காச்சோளத்தை சாப்பிட்டு ஐந்து மயில்கள் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தன.


கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தில் விவசாய நிலங்களில் மக்காசோளம் விதை விதித்துள்ளனர். மக்காச்சோள விதைகளை விலங்குகள் சாப்பிடாமல் இருக்க வயல் பகுதியில் குருனை மருந்து போடப்பட்டதா கூறப்படுகிறது.


இந்நிலையில் அங்கு வந்த மயில்கள் விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த குருனை மருந்தை தின்றதால் சம்பவ இடத்திலேயே 4 ஆண்மையில், ஒரு பெண்மையில் உட்பட ஐந்து மயில்கள் இறந்தன. 


இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் வனத்துறை அலுவலர் ரவி தலைமையிலான வனவர் பூமிநாதன், வனக்காப்பாளர் சங்கர், பாலகிருஷ்ணன் மற்றும் இடைச்செருவாய் கிராம நிர்வாக அலுவலர் சௌந்தரராஜன் ஆகியோர் மயில்களை மீட்டு கால்நடை மருத்துவர் கமலநாதன் மயில்களை உடற்கூறு ஆய்வு செய்து காப்புக் காட்டில் புதைத்தனர். 


மேலும் விசாரணையில் வயலின் உரிமையாளர் ஆ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சந்திரன் (58) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வயலில் ஒரே நேரத்தில் 5 மயிலகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

No comments

Thank you for your comments