Breaking News

அய்யனார் கோவிலின் ஆடி மாத வசூல் உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்கள்

 விருத்தாச்சலம்

விருத்தாச்சலம் அருகே ஆடி மாதம் முடிந்ததும், அய்யனார் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் புகழ்பெற்ற அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. 

இத்திருக்கோயிலின் முன்பு உள்ள உண்டியலை, நேற்று இரவு மர்ம நபர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து, அதில் இருந்த அனைத்து பணம் மற்றும் காசுகளை திருடிச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் அதிகாலை உண்டியலை உடைத்து இருப்பதை கண்ட அக்கிராம மக்கள், கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடி மாதம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில், குலதெய்வ வழிபாடு செய்து வந்ததால், சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணம் உண்டியலில் இருந்திருக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

No comments

Thank you for your comments