Breaking News

41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஹாக்கியில்... இந்தியா வென்றது வெண்கலப் பதக்கம்..!

டோக்கியோ, ஆக.5-

41 ஆண்டுகளுக்குப் பின்பு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி இன்று பதக்கம் வென்றது. ஐந்துக்கு நான்கு (5-4) என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஜெர்மனி அணியை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.


ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியாவே மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.

இந்திய அணியின் வீரர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியை சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் 17வது நிமிடத்திலும் 34வது நிமிடத்திலும் இரண்டு கோல்களைப் போட்டார் ஹர்திக் சிங் 27வது நிமிடத்தில் மற்றொரு கோல் போட்டார் இந்திய அணியைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் சிங் 29 வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். ரூபிந்தர் பால்சிங் 31 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலும் போட்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.


விடுமுறை ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி இடையில் ஏற்பட்ட சரிவை நோக்கி மீண்டும் வெற்றிப் பாதையில் பயணத்தைத் தடுக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டது அந்த முயற்சிக்கு ஒலிம்பிக் போட்டியில் பலன் கிடைத்துள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்றதும் அணியின் விளையாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

இப்போட்டியில் இந்தியா பெரும் மூன்றாவது வெண்கலப்பதக்கம் ஆக இந்த ஆண்டு பதக்கம் அமைந்துள்ளது. ஏற்கனவே 1968ஆம் ஆண்டு மெக்சிகோ சிட்டியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும், 1972ஆம் ஆண்டு மூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

தலைவர்கள் பாராட்டு

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் உட்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“தீபக் புனியா, வெண்கலப் பதக்கத்தைக் குறைந்த வித்தியாசத்தில் இழந்திருக்கிறார், ஆனால் நமது மனங்களை அவர் வென்றுள்ளார். மன உறுதி மற்றும் திறமையில் ஆற்றல்மிக்கவராக அவர் விளங்குகிறார். தீபக்கின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.”  இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

No comments

Thank you for your comments