ஒலிம்பிக் மல்யுத்தம் - வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரிடம் தோல்வியடைந்த இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக் புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார்.
அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா.
இந்நிலையில், ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் (ரஷ்யா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் ரஷ்ய வீரரின் உடும்பு பிடியால் புள்ளிகளை இழந்த ரவிக்குமார், பின்னர் சுதாரித்து கடுமையான முயற்சி மேற்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-4 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய வீரர் ரவிக்குமார் போராடி வீழ்ந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம், இந்தியாவுக்கு 2வது வெள்ளியையும், மொத்தமாக 5வது பதக்கத்தையும் அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
தலைவர்கள் பாராட்டு
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் உட்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
Ravi Kumar Dahiya is a remarkable wrestler! His fighting spirit and tenacity are outstanding. Congratulations to him for winning the Silver Medal at #Tokyo2020. India takes great pride in his accomplishments.
— Narendra Modi (@narendramodi) August 5, 2021
“ரவி குமார் தாஹியா, குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர்! அவரது போராடும் ஆற்றலும், விடாமுயற்சியும் மிகச் சிறப்பாக உள்ளது. டோக்கியோ 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா மிகுந்த பெருமை கொள்கிறது”, என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:
Congratulations to Ravi Kumar Dahiya for his #Silver in #Wrestling.
— M.K.Stalin (@mkstalin) August 5, 2021
The fact that he is only the second Indian wrestler to have reached #Olympics final itself speaks volumes of his phenomenal achievement. I extend my warm wishes for his future career. #Tokyo2020 pic.twitter.com/8wtXRfcmlk
Another medal for @WeAreTeamIndia!Kumar Ravi of #IND takes #silver in the men's freestyle 57kg #Wrestling#StrongerTogether | @Tokyo2020 | @Wrestling pic.twitter.com/7bNZ4jdfya— Olympics (@Olympics) August 5, 2021
#RaviKumarDahiya has won the #SILVER medal for #IND 🙌#Tokyo2020 #ravidhaiya pic.twitter.com/qtpxw1k8P3
— Fukkard (@Fukkard) August 5, 2021
Congratulations #RaviKumarDahiya to win silver medal 🏅 in #Olympics2020 .Yo have made #ind proud. pic.twitter.com/qT1J1Xbzxv— Manmohan Demrot (@ManmohanDemrot) August 5, 2021



No comments
Thank you for your comments