Breaking News

40 ஆண்டுகளாக தொடர் கல்விச் சேவை காட்பாடி நாராயணா இ-டெக்னோ பள்ளி!

 வேலூர் :

40 ஆண்டுகளாக தொடர் கல்விச் சேவையில் ஈடுபட்டு வருகிறது காட்பாடியில் உள்ள நாராயணா இ-டெக்னோ பள்ளி. இதனால் பெற்றோர்கள் ஆர்வமாக தங்களது குழந்தைகளை நாராயணா இ-டெக்னோ பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.


 வேலூர் மாவட்டம், காட்பாடியில் நாராயணா இ-டெக்னோ பள்ளி இயங்கி வருகிறது. நாளைய இளம் சிந்தனையாளர்களையும், உலகளாகிய தலைவர்களையும் உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறந்த கல்வியாளர் முனைவர். பி.நாராயணா, நாராயணா கல்விக்குழுமத்தை நிறுவியுள்ளார். இக்கல்வி குழுமம் கடந்த 1979ம் ஆண்டு தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

இங்கு கல்வி என்பது கல்வியாளர்கள், கலைகள், விளையாட்டு, படைப்பாற்றல், ஆளுமை வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் போன்ற வளர்ச்சி கூறுகளை மேம்படுத்தவும், நாட்டின் செழிப்பை உயர்த்துவதற்குமான கலவையே கல்வி ஆகும். இந்த பள்ளி மாணாக்கர்களை அடிப்படை கல்வியில் இருந்தே சீரான நேர்கோட்டுப் பாதையில் அழைத்துச் செல்கின்றனர். சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கும் மிகச் சிறப்பான கல்வியை வழங்கி வருகின்றனர். இப்பள்ளி நடுவண் இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இந்திய பள்ளியச் சான்றிதழ் கல்வி வாரியம் (ஐசிஎஸ்இ) ஆகிய கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் இ-கிட்ஸ், இ-சாம்ப்ஸ், இ-டெக்னோ என்ற மூன்று நிலைகளாக (என்.யூ., எல்கேஜி, மற்றும் யூகேஜி) (1-5), (6-10) செயல்பட்டு வருகிறது. மாணாக்கர்களுக்கு பல அடிப்படை பயிற்சிகளை திறம்பட வழங்கி வருகின்றனர்.

பள்ளியில் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் மருத்துவர், ஆசிரியர், பொறியாளர், வழக்குரைஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் போன்று வேடமணிந்து நடித்துக் காட்டுவதற்கு இப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்றுவிக்கின்றனர். களிமண்ணால் கைவினைப் பொருட்கள் செய்யும் போட்டியில் இப்பள்ளி மாணாக்கர்கள் மண்டல, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மாணாக்கர்கள் ஒன்வொரு நிலைக் கல்வியை முடிக்கும் போதும் அவர்களுக்குப் பட்டமளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. சனிக்கிழமைதோறும் தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், இந்தி மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக மன்றம், நிதி ஆளுமை மன்றம், விளையாட்டு மன்றம் போன்ற மன்றங்களின் வாயிலாக பல்வேறு செயல்பாடுகள், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், பாராட்டும் வழங்கப்படுகிறது. மாணாக்கர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை மாணாக்கர்களுக்கு எடுத்துக் கூறி சத்தான உணவு உண்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். மாணாக்கர்களின் கதாநாயகனாக திகழும் பெற்றோர்களுக்கு மாணாக்கர்களே கைவினை வேலையின் வாயிலாக பரிசுப் பொருட்களை செய்து அவர்களுக்கு வழங்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் அக்னி, பிரித்திவி, நாக், திரிசூல் ஆகிய நான்கு குழுக்களின் பொறுப்பாளர்களை வாக்குப்பதிவின் வாயிலாக தேர்வு செய்து பதவியேற்பு விழாவைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். மேலும் ஆண்டு விழாவில் பள்ளியின் ஆண்டறிக்கை, கலைநிகழ்ச்சி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு மாணாக்கர்கள் விரும்பும் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களைத் தகுதிவாய்ந்த விளையாட்டு வீரனாக மாற்றுவதற்கு கூடுதல் கவனத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

2021-22ம் கல்வி ஆண்டுக்கான இயங்கலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்தப்பள்ளியின் நிறுவனர் முனைவர்.பி..நாராயணா தனது பள்ளியை சற்று வித்தியாசமானதாக நடத்தி பெற்றோர்களிடமும், மாணாக்கர்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளார். 

கல்விச் சேவையை 40 ஆண்டுகளாக மேற்கொள்ளும் நாராயணா இ-டெக்னோ பள்ளியை நாடி தங்களது பிள்ளைகளின் வாழ்வு செழிக்க பெற்றோர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.

No comments

Thank you for your comments